tamilnadu

img

ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட மதரசா ஆசிரியர்...

கொல்கத்தா:
‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூற மறுத்ததற்காக, மதரசா ஆசிரியர் ஒருவரை ரயிலிலிருந்து வெளியே தள்ளிவிட்ட கொடுமை மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது.மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இருந்து கூக்லிக்கு, கடந்த 20-ஆம் தேதி ஹபீஸ் முகமது ஷாரூக்ஹால்தர் என்பவர் பயணித்துக் கொண்டு இருந்துள்ளார். 26 வயதே ஆன இவர், மதரசா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், ரயில் தக்கூரியாவில் இருந்து பார்க் சர்கஸ் ஸ்டேசன் சென்று கொண்டிருக்கும்போது, அவருடைய கம் பார்ட்மெண்டில் ஏறிய கும்பல் ஜெய் ஸ்ரீராம்என்று கோஷமிட்டபடி உள்ளே நுழைந்துள் ளனர். பின்னர் அவர்கள் ஹால்தரிடம் வந்து‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறச் சொல்லி நிர்ப்பந்தம் செய்துள்ளனர். ஆனால், ஹால்தர் மறுக்கவே, அவரை சரமாரியாகத் தாக்கியதுடன், பார்க் சர்கஸ் ஸ்டேஷன் வரும் போது அவர்கள் ஹால்தரை, ரயிலிலிருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். 

இதில் ஹால்தர் கண்ணில் படுகாயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இதனிடையே தன்னைத் தாக்கியவர் தொடர்பாக ஹால்தர் அளித்த புகாரின்பேரில், ஐ.பி.சி. 323, ஐ.பி.சி. 325, 506, மற்றும் 34 பிரிவுகளின் கீழ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது பல்லிகுங்கே ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;